Categories
உலக செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற இந்திய பெண்…8 வருடமாக நடந்த கொடுமை… வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆஸ்திரியாவில் அடிமை போன்று நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த தம்பதி ஒருவர் 2007 முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒரு பெண்ணை அடிமையாக வைத்திருந்தனர். அப்பெண் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறார். 60 வயதுடைய அந்த பெண் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது வெறும் 40 கிலோ எடை மட்டுமே இருக்கிறார். அவர் அந்த தம்பதிகளின் மூன்று குழந்தைகளை பராமரித்து வீட்டு வேலைகளை செய்து வந்தார்.

ஆனால் சிறுநீர் கழிவு கிடந்த ஒரு அறையில் அடிமை போன்று நடத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கு கடந்த புதன்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகள் நாங்கள் அந்த பெண்ணை அப்படி கொடுமை ஒன்றும் படுத்தவில்லை. பாதுகாப்பு கருதியே உள்ளேயே வைத்திருந்தோம் என்று தெரிவித்தனர். கொரோனா வைரஸ் காரணமாக மாநில அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதால் இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |