Categories
உலக செய்திகள்

“அதிசய நிகழ்வு!”….. 6 மாதங்களாக கொரோனாவோடு மல்லுக்கட்டி…. உயிர்பிழைத்த இந்தியர்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிப்படைந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இந்தியர் உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த 32 வயதான அருண்குமார் நாயர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு ஜூலை மாதம் 31-ஆம் தேதியன்று உயிர்க் காக்கக்கூடிய கருவிகளை பொருத்தி செயற்கை சுவாசம் அளித்து வந்தனர். எனினும், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், சுமார் 118 நாட்களுக்குப்பிறகு அவருக்கு பொருத்தப்பட்ட உயிர்காக்கும் கருவிகளை நீக்கிவிட்டனர்.

இந்நிலையில், சுமார் ஆறு மாதங்கள் கடந்த பின் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர் முழுமையாக குணமடைந்து குரோனோ பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார். அவர், மேற்கொண்ட பணி மற்றும் கொரோனாவுடன் போராடி மன தைரியத்துடன் மீண்டு வந்ததை பாராட்டும் வகையில் ஒரு நிறுவனம், அவருக்கு 50 லட்சம் கொடுத்ததோடு, அவரின் மனைவிக்கு பணிவாய்ப்பு வழங்கி, அவர்களின் பிள்ளைகள் படிப்பு செலவையும் ஏற்றிருக்கிறது.

Categories

Tech |