இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு அதிகாரி பிரிவுகளில் 25 பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப் பவர்களுக்கு 25 முதல் 30 வயதிற்குள் இருப்பதோடு, மேற்படி விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
இந்த வேலைக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.job.in என்ற இணையதளத்தில் நவ. 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு 49,910 முதல் 69,810 வரை சம்பளமானது வழங்கப்படும். மேலும் விவரங்களை https://www.job.in/upload/ CEDocuments/IT_specialist HRDD_2022-23.pdf என்ற இணையதள முகவரிக்குள் சென்று தெரிந்து கொள்ளலாம்.