இந்தியாவின் உயர்மட்ட குழுவானது, கல்வித்துறை ஒத்துழைப்பு தொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறது.
இந்திய-அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இரண்டு நாடுகளுக்கிடையே கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு நாட்டு மக்களுக்கிடையேயான தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக மாணவர் மற்றும் கல்வியாளர் அமைப்பை ஊக்குவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து இரண்டு நாட்டு கல்வி ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆய்வதற்காக இந்திய உயர்மட்ட குழுவானது, அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறது. முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு இந்த குழுவை தலைமை தாங்குகிறார். தற்போது, இந்த குழுவானது அமெரிக்க நாட்டின் பல நகரங்களில் சுற்றுபயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார்கள்.