Categories
உலக செய்திகள்

அன்று வறுமையில் வாடிய இந்தியர்…. இன்று அமெரிக்க விஞ்ஞானியானது எப்படி?….

வறுமையில் வாடிய இந்தியாவை சேர்ந்த நபர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்து, அசர வைத்திருக்கிறார்.

மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் சிர்சாதி கிராமத்தில் பிறந்த பாஸ்கர் ஹலாமி என்ற 44 வயது நபர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பமே  வறுமையில் வாடியது. ஆசிரம பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற ஹலாமி, அதன் பிறகு உதவித்தொகை மூலம் பத்தாம் வகுப்பு வரை கற்றார்.

கட்சிரோலியில் இருக்கும் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, நாக்பூர் அறிவியல் மையத்தில் முதுகலை பட்டத்தை பெற்றார். 2003 ஆம் வருடத்தில் லட்சுமி நாராயணன் தொழில்நுட்ப மையத்தில் உதவி பேராசிரியர் ஆனார். அதன் பிறகு அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பை முடித்துவிட்டு, DNA, RNA ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

அதில் சிறந்த விஞ்ஞானியாகிவிட்டார். கடுமையான உழைப்பின் மூலம் கிடைத்த சிறு தொகையில் தன்னை படிக்க வைத்த பெற்றோருக்கு தன் வெற்றியை காணிக்கையாக்கியுள்ளார். தற்போது இவர் அமெரிக்க நாட்டின் மேரிலேண்டில் இருக்கும் ஒரு மருந்து நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

மேலும், தன் சொந்த ஊரில் அமைந்திருக்கும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆலோசனைகளையும் அளித்துக் கொண்டிருக்கிறார். சிறுவயதில் வறுமையில் வாடிய ஒரு நபர், ஒருவேளை சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்ட ஒரு நபர், இன்று அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணிபுரியும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

Categories

Tech |