காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்கள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பெரிய அளவு வன்முறை ஏதும் நடக்காத சூழ்நிலையில் தீவிரவாதிகளை அதிகளவில் ஊடுருவ வைத்து அவர்கள் மூலமாக வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும் என்பது பாகிஸ்தானின் முயற்சியாக இருக்கிறது என்று இந்திய ராணுவம் அரசுக்கு எச்சரிக்கை அனுப்பி இருந்தது. இந்த இந்த நிலையில் பல்வேறு பகுதிகள் தீவிரவாதிகள் அத்துமீறல் நடந்து வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத குலுக்கல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று இந்திய இராணுவத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல காஷ்மீர் எல்லையில் பதற்றமான ஒரு சூழலை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய ராணுவம் , விமானப்படை , பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.