நாளை இரவு விளக்கு ஏற்றுவதற்கு முன்பு சனிடைசரால் கைகளை கழுவ வேண்டாம் என்று இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது
பிரதமர் மோடி நேற்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச், செல்போன் லைட் அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு சானிடைசர்களை வைத்து கையை தூய்மை செய்ய வேண்டாமென்றும், அனைவருமே சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவுமாறும் இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏனெனில் 60 விழுக்காட்டுக்கு மேல் எத்தில் ஆல்கஹால் எனப்படும் எரிசாராயம் சானிடைசரில் கலந்து இருப்பதால், அதில் கைகளை நனைத்து விட்டு பின் விளக்கேற்றும்போது தீப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது. அதனால் தான் இந்திய ராணுவம் இந்த வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆகவே அனைவரும் இதனை பின்பற்றுவோம்.
கொரோனா வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க அனைவரும் சானிடைசர் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சாதாரணமான சோப்பை வைத்து நன்கு கையை கழுவினாலே போதும். கண்டிப்பாக சானிடைசர்கள் தேவை என்றெல்லாம் கிடையாது. அதை பயன்படுத்துவது அவரவர் விருப்பம். ஒருவேளை நீங்கள் சானிடைசர் பயன்படுத்தி கையை கழுவுபவராக இருந்தால் அந்த நேரத்தில் மட்டும் சாதாரண சோப்பை பயன்படுத்தி கையை கழுவுங்கள்.