இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இது தொடர்பாக இணை இயக்குனர் குமார் , நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் லைகா நிறுவனம் மற்றும் கிரேன் உரிமையாளர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்ட 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்