Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இலங்கை போட்டி …. இங்கிலாந்தில் கண்டு ரசித்த சீனியர் வீரர்கள் …. இணையத்தில் வைரல் …!!!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய சீனியர் வீரர்கள் இந்தியா-இலங்கை 2- வது ஒருநாள் போட்டியை கண்டு  மகிழ்ந்தன

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பில்   நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது .இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா ,இஷான் கிஷன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் ஷிகர் தவான் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு மணிஷ் பாண்டே- சூர்யகுமார் யாதவ் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது .இதில் மணிஷ் பாண்டே 37 ரன்களும் , சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியாக தீபக் சாகர் -புவனேஷ்வர்  குமார் ஜோடி அதிரடி காட்டியது. இதில் அதிரடி காட்டிய தீபக் சாகர் பந்துகளை பவுண்டரிகளாக அடித்து விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்களை குவித்தார் .இறுதியாக இந்திய அணி 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியை சீனியர் வீரர்கள் கண்டு ரசித்து மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்து புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |