வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது .இதற்கு முன்னதாக இந்திய அணியில் ஷிகர் தவான் , ஸ்ரேயாஸ் அய்யர் , ருதுராஜ் கெய்க்வாட், அக்சர் படேல் மற்றும் நவதீப் சைனி ஆகியோர்க்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர் .
இதனால் அவர்கள் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை.இந்நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் ஷிகர் தவான் ஆகியோருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் தொற்று இல்லை என்பதை குறிக்கும் நெகட்டிவ் முடிவு உறுதியாகியுள்ளது.இருப்பினும் அவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.