Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து 2-வது டெஸ்டில் ….! இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் ….!!!

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது .

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட்  போட்டி டிரா ஆனது .இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த  கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்ட் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புகிறார் .எனவே அவரது வருகையால் அணியில் வெளியேற்றப்படும் வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இதனால் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது. எனவே அணியில் சீனியர் வீரர்களாக ரகானே புஜாரா மற்றும் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஆகிய மூவரில் ஒருவர் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது .அதேசமயம் பந்துவீச்சாளர்களில் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சு முதல் டெஸ்டில் எடுபடவில்லை.இதனால்  அவருக்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் முகமது சிராஜ் அணியில் இடம் பெறலாம். இதையடுத்து நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட்  போட்டியை டிரா செய்தது. அதே சமயம்  அணியில் தொடக்க வீரர்களான டாம் லாதம், வில் யங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .அதேபோல் பந்து வீச்சிலும் அஜாஸ் பட்டேல், டிம் சவுதி ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர் .எனவே இன்றைய போட்டியில் பிளேயிங் லெவலில் இடம்பெறும் போகும் வீரர்கள் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல் :-
இந்தியா: சுப்மான் கில், மயங்க் அகர்வால் அல்லது ரஹானே, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா அல்லது கே.எஸ்.பரத், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
நியூசிலாந்து: வில் யங், டாம் லாதம், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ரச்சின் ரவீந்திரா, கைல் ஜாமிசன், டிம் சவுதி, அஜாஸ் பட்டேல், சோமர்வில் அல்லது நீல் வாக்னெர்.

Categories

Tech |