Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS நியூசிலாந்து மோதும் முதல் டி20 போட்டி …..ஜெய்ப்பூரில் இன்று தொடக்கம் …..!!!

இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது .

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது இதில் இந்தியா-  நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டி20 போட்டி ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனிடையே இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் .அதோடு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே புதிய தலைமையின் கீழ் இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாடுகிறது என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .அதேசமயம் அணியில் முன்னணி வீரர்களான விராட்கோலி, பும்ரா ,முகமது ஷமி மற்றும்  ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது .இதனிடையே ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களான வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

Categories

Tech |