Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய வீரர்களின் லன்ச் மெனுவை பாத்தீங்களா’ ….! இணையத்தில் டிரெண்டாகும் லன்ச் மெனு ….!!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் மதிய உணவு பட்டியல் புகைப்படம்  தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.  இதில் கே.எல்.ராகுல் 122 ரன்னும் , ரஹானே 40 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர் . இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்க இருந்தது. ஆனால் மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது .

இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு மதிய உணவுக்கு தயாராக இருந்த உணவு பட்டியல் அட்டவணை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .நேற்றைய போட்டியில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு வீரர்களுக்கான உணவு இடைவேளை வந்தது .அப்போது இந்திய அணியின் ஓய்வறையில் அவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உணவு பட்டியல் பலகையை மைதானத்திலிருந்த ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த உணவுப் பட்டியலில் சிக்கன் செட்டிநாடு,வெஜிடபிள் கடாய், போன்ற பல்வேறு உணவு வகைகள் இடம்பெற்றிருந்தது .தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |