இந்தியா அனுப்பிய 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிதி நெருக்கடியால் இலங்கை மக்கள் ஒவ்வொரு நாளும் அதிக இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். பெட்ரோல் டீசல் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களாக மின்தடை என்று மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதனிடையே இந்தியா, இலங்கைக்கு தேவையான எரிபொருள், உணவுப்பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. அதன்படி, சுமார் 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி இந்தியாவால் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இவை நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.