Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தின் பிறப்பிடமாய் திகழ்கிறது பாகிஸ்தான் – இந்திய வெளியுறவுத்துறை

பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாகத் திகழ்கிறது என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐநா மனித உரிமை ஆணையத்தின் 43வது மறுசீரமைக்கப்பட்ட அமர்வு நடைபெற்றது. இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி கூறிய போது “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று தன்னை அழைக்கும் அதேவேளை அது ஜம்மு காஷ்மீர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இரும்புத் திரைக்குப் பின்னால் மறைந்து கொள்கின்றது. அது மனித உரிமை மீறல்களை செய்து வருகின்றது.

சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் அளவீடுகளில் இந்தியா மிகவும் மோசமானதாக உள்ளது” எனக் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விமர்ஸ் ஆர்யன் பதில் அளித்தபோது, “பாகிஸ்தான் அவர்களது நாட்டில் சிறுபான்மையினரை தொடர்ந்து சித்திரவதை செய்து வருகின்றனர். பஞ்சாப் மாகாணத்தில் இருந்த கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்ட சம்பவம், இறந்த இந்து ஒருவரின் இறுதிச்சடங்கில் மேற்கொண்ட தாக்குதல் சமீபத்திய உதாரணங்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதத்தின் மையமாக உள்ளது. ஐநா மனித உரிமை ஆணைய உறுப்பினர் தகுதியை அது தவறாக பயன்படுத்தி வருகின்றது. வியன்னா உடன்படிக்கையின் தொகுதி-1 மற்றும் பகுதி 17 சரியாக புரிந்து கொள்ள வேண்டும் மனித உரிமைகளை மீறும் அனைத்து செயல்களையும் பாகிஸ்தான் கைவிட வேண்டும்” என கூறினார்

Categories

Tech |