உலகிலேயே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும், அதிக உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
உலகிலேயே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும், அதிக உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா 2019-ஆம் ஆண்டில் உடல் உறுப்புகள் தானம் அளிப்பதன் எண்ணிக்கை 12,746-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச அறுவை சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் உடல் உறுப்பு தானம் அளிக்கும் எண்ணிக்கையானது ஆண்டுதோறும் அதிகரித்து வருவது பெருமையாக உள்ளதாக கூறியுள்ளார். அதேபோல் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உடல் உறுப்புகள் தானத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.