இந்தியா உட்பட 7 நாடுகளின் பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் செல்வதற்கான தடை ஜூலை15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது .
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-ம் அலை வேகமாக பரவி அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்தது . இந்த நிலையில் கொரோனா வைரஸ் 2-ம் அலை காரணமாக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை ,ஓமன், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனான விமான போக்குவரத்துக்கு ஜூன் 30ஆம் தேதி வரை பிலிப்பைன்ஸ் அரசு தடை நீட்டிக்கபடுவதாக தெரிவித்தது .
இந்நிலையில் மேலும் 15 நாட்களுக்கு இந்த தடை நீடிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ஜூலை 15ஆம் தேதி வரை இந்தியா உட்பட 7 நாடுகளின் பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.