நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டு உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை எந்த ஒரு நாடாளும் கைப்பற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியா சீனா எல்லை விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நமது நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும்.
நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லையைக் காக்கும் திறன் நமது நாட்டின் படைகளுக்கும் நாட்டின் தலைமைக்கும் இருப்பதாகவும் தெரிவித்தார். எல்லையில் எந்த வடிவில் அத்துமீறல் நடைபெற்றாலும் அதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகள் தயாராக இருப்பதாகவும் திரு அமித்ஷா குறிப்பிட்டார்.