Categories
உலக செய்திகள்

உலகில் அதிக மாசடைந்த நாடுகளின் பட்டியல்… 2-ஆம் இடத்தில் இந்தியா…!!!

உலக சுகாதார மையமானது அதிக மாசடைந்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய நாட்டின் கங்கை சமவெளி பகுதி தான் உலகத்திலேயே அதிகமாக மாசடைந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதலிடத்தில் பங்களாதேஷ் இருக்கிறது.

இவ்வாறு அதிக அளவில் காற்று மாசு ஏற்படுவது, கருவில் இருக்கும் சிசு முதல் வயதானவர்கள் வரை அனைத்து மக்களையும் பாதிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதே போன்ற நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்திய மக்களின் ஆயுட்காலம் சராசரியாக ஐந்து ஆண்டுகள் குறைந்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் காற்று மாசு அதிகமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் உத்தரபிரதேசம், பீகார், டெல்லி போன்ற மாநிலங்களில் காற்று மாசு அதிகம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |