நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் புதிய வேக வரம்பு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். அதன் பிறகு சர்வதேச விதிகளின் அடிப்படையிலும், மாநில அரசுகளின் ஆலோசனையின் பெயரிலும் இருவழிச்சாலை மற்றும் நான்கு வழி சாலைகளில் புதிய வேகவரம்பு நிர்ணயிக்கப்படும். சர்வதேச அளவில் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
அதன்படி ஒரு வருடத்திற்கு சராசரியாக 5 லட்சம் விபத்துக்கள் நடைபெறுவதோடு, சாலை விபத்துகளில் உயிர் இழப்பதை விட தொற்றுநோய், கலவரம் மற்றும் போர் போன்ற காரணங்களில்தான் உயிரிழப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது என்று வேதனை தெரிவித்தார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும், பொது மக்களிடம் உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அதற்கான நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் கூறினார்.