Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.66 லட்சமாக உயர்வு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,66,840ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 418 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16,893ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,15,125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,69,883 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88,960ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,610ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 85,161ஆக உள்ளது. தமிழகத்தில் 86,224 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 31,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் – 17,660, ஹரியானா – 14,210, தெலுங்கானா – 15,394, ஆந்திரா – 13,891, கர்நாடகாவில் 14,295 பேரும், பீகார் – 9,640, கேரளா – 4,189 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை 5ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்கள் இடையே பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

Categories

Tech |