சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை உள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார்.
ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், இந்தியா மிக சிக்கலான கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என கூறிய அவர் சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுவரை நிலம் தொழிலாளர்கள் பணப்புழக்கம் சட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம், ஜந்தன் கணக்குகள் மூலம் மக்களுக்கு நேரடியாக பண உதவி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 கோடி பெண்களுக்கு ஜந்தன் வங்கி கணக்கின் மூலம் 10 ஆயிரத்து 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
8.9 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக தலா ரூ.2000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ரயில் கட்டணத்தில் 85% மத்திய அரசு வழங்கியது என தகவல் அளித்துள்ளார். மேலும் நிலம், தொழிலாளர் நலன், பணப்புழக்கம், 100நாள் வேலைத்திட்டம், மருத்துவம் மற்றும் கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட 7 அறிவிப்புகள் இன்று வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.