கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் இந்தியா அனுப்பியிருக்கிறது.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. டீசல் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து முடங்கிவிட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது.
இந்நிலையில், மண்ணெண்ணெய்க்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. அதன்படி கப்பலில் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அவை சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.