இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 267ஆக அதிகரித்துள்ளது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை 3,072லிருந்து 3,374ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேருக்கும், கேரளாவில் 306 பேருக்கும், தெலுங்கானாவில் 269 பேருக்கும், உ.பியில் 227 பேருக்கும், ராஜஸ்தானில் 200 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75லிருந்து 77ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, குணமடைந்தோர் எண்ணிக்கை 213லிருந்து 267ஆக உயர்ந்துள்ளது எனவும் மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா பயம் நாட்டு மக்களிடையே இருந்து வந்தாலும் 267 பேர் குணமடைந்து கொரோனாவை வென்றுவிடலாம் என மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.