Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா எனக்கு ரொம்ப ஸ்பெஷல்’…கொரோனா பாதிப்பிற்கு உதவி செய்த சிஎஸ்கே வீரர் …!!!

இந்தியாவில் தற்போது கொரோனா  தொற்றால் , தினசரி பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா  வைரஸின்  இரண்டாம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு,கொரோனா தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால் , ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்றிருந்த ஒரு சில வீரர்கள் மற்றும் ஐபிஎல் அணிகள் இந்தியாவின்  கொரோனா  பாதிப்பிற்கு , நிதி உதவி வழங்கி வந்துள்ளன.

தற்போது சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த, ஆஸ்திரேலிய வீரரான ஜேசன் பெஹ்ரன்டார்ஃப்,  இந்தியாவின் கொரோனா  பாதிப்பிற்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துப் பொருட்களை வாங்குவதற்காக ,  UNICEF நிதி உதவி திட்டத்தின் மூலம் என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளதாகவும், அதோடு மற்றவர்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மற்ற வீரர்களுக்கு போலவே எனக்கும் இந்தியா மிகவும் ஸ்பெஷலான இடம் தான் என்றும் , தற்போது இந்தியாவின் நிலையை கண்டு மிகவும் வருத்தமாக இருப்பதாக தன்னுடைய ட்விட்டர்  பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |