இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட்போட்டி பிரிஸ்டலில் உள்ள கவுண்டி மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது . கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மகளிர் அணி மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதாவது 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி விளையாடுவதால் இந்த டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 போட்டியிலும் , இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் 10 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது . இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடிய இந்திய அணி இதுவரை நடந்த டெஸ்ட் போட்டியில் தோற்றது கிடையாது. இதனால் இந்தியாவுக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தன் சொந்த மண்ணில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி சோனி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது .