இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது . இந்தப் போட்டிகள் அனைத்தும் இலங்கை பிரேமதாசா மைதானத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் மற்றும் துணை கேப்டனாக புவனேஸ்வர் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். இந்த தனிமைப்படுத்துதல் வீரர்களுக்கு 3 முறை பரிசோதனை செய்யப்படும். இதன் பின்பு ஜூன் 28 ம் தேதி மும்பையிலிருந்து இந்திய அணி வீரர்கள் கொழும்பு நகருக்கு சென்றபின் , அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இலங்கையில் தனிமைப்படுத்துதல் முடிந்தபின் வீரர்கள் பயிற்சியில் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.