Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ….! அமெரிக்க அணிக்காக விளையாடும் இந்திய வீரர் ….!

2016 -ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பிடித்திருந்த பிபுல் சர்மா இந்திய  கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்காவில் கிரிக்கெட்  விளையாட செல்ல உள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு விளையாடி வந்தாலும் அவர்களில் ஒரு சிலருக்கே இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைக்கிறது .அதை தவிர மற்ற வீரர்கள் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன .அதன்படி உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் ஒரு சில வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுகின்றனர் .ஆனால் பல வீரர்கள் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வு பெற்று வெளிநாடுகளுக்கு சென்று விளையாடுகின்றன.

அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் பிபுல் சர்மா இந்தியாவில் இருந்து ஓய்வுபெற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இதுவரை 33 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் இடம் பெற்றிருந்தார் .மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் 59 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3012 ரன்களும் ,126 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார்.

அதேசமயம் 105 டி20 போட்டிகளில் விளையாடி 84 விக்கெட்டும், 1203 ரன்களும்  குவித்துள்ளார் . இப்படி பல வகை போட்டியில் அவர் விளையாடி வந்தாலும் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை .இதனால் தற்போது இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று அமெரிக்கா சென்றுள்ளார் .இதற்கு முன்பு பல வீரர்கள் இதே போல் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.

Categories

Tech |