கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா – சீனா பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இதனையடுத்து இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் படைகளை திரும்ப பெற்று கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில் இன்று 3வது முறையாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். லடாக் எல்லையில் நடைபெறும் 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய-சீன அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.