Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை : முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை!

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து முப்படை தலைமை தளபதியுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, இருநாடுகளும் தங்களது படைகளை திரும்பப்பெற்றனர்.

இதையடுத்து எல்லைப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ராஜ்நாத் சிங் முப்படை தளபதியுடன் ஆலோசனையும் நடத்தினார். இந்த நிலையில் நேற்று இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக தீவிரமடைந்து வந்த இந்த பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய முடிவெடுத்ததன் காரணமாக, எல்லையில் அமைதி நிலவுவதாக இரு நாடுகளும் கூறி வந்தன. இந்த நிலையில் சீனா திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் மரணமடைந்துள்ளனர். இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், 2வீரர்களும் வீர மரணம் அடைந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1975க்கு பிறகு சீனாவுடன் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். மேலும் ஏராளமான வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சீன எல்லையில் உருவாகி உள்ள அசாதாரண சூழல் குறித்து முப்படை தலைமை தளபதியுடன் பாதுகாப்பு துறை அமைச்சர்ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தளபதிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என சீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |