Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா எல்லை பிரச்னை – ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம்அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முப்படை தளபதியுடன் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று காலை மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பை அதிகரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இதனிடையே இந்தியா – சீனா எல்லை பிரச்னை குறித்து பிரதமர் மோடியிடம், ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்திருந்தார். இந்தியா – சீனா எல்லை பிரச்சனையால் இரு நாடுகளிலும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் லடாக் எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள சீனா முடிவு செய்துள்ளது.

இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை என சீன வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த சூழலில் இந்தியா – சீனா விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜூன்19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு காணொலி மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்காலத்தில் இந்த எல்லை பிரச்சனையை தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம், பொதுமக்களின் பாதுகாப்புகள் குறித்து எதிர்கட்சிகளுடன் பிரதமர் மோடி ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளார்.

Categories

Tech |