சீனாவுடன் தொடர்புடைய 55 செயலிகளை முடக்க கோரி மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேச கூடிய ஒரு விஷயம் சீனா இந்தியா மோதல்தான். இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்கக் கூடாது என்றும், made in china என வரக்கூடிய எந்த பொருளையும் வணிகர்களும் இந்திய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் மூலமாக அறைகூவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் சீனாவுடன் தொடர்புடைய 55 செயலிகளை முடக்க கோரி மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் பரிந்துரை செய்துள்ளனர்.
இவற்றின் மூலம் இந்தியா பற்றிய தகவல்கள் வெளி நாடுகளுக்கு பகிர வாய்ப்பு இருப்பதால் இச்செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டு மக்கள் சீனா பொருட்களை புறக்கணிக்க முன்வந்த நிலையில், சீனாவின் கீழ் உருவாக்கப்பட்ட செயலிகளையும் புறக்கணிக்க வேண்டும். இதன்மூலம் நம்முடைய தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.