ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாதத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய இரு வருடங்களுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு நாட்டிற்கு வழங்கப்படும். அந்த வகையில் இந்தியாவிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இம்மாதம் மீண்டும் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக இருக்கும் ருச்சிரா காம்போஜ் தலைவருக்கான இருக்கையில் அமர வைக்கப்பட்டார். இந்தியா தலைமை பொறுப்பை வகித்திருக்கும் இம்மாதத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் ஐக்கிய நாடுகளில் நடக்க இருக்கிறது.