Categories
தேசிய செய்திகள்

இந்திய – அமெரிக்க வெளியுறவு, ராணுவ அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை…!!

இந்தியா அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்திய அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே கடந்த  2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நேரடிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பாப்ரியோ, ராணுவ அமைச்சர் மார்க்ஏஸ்பர் ஆகியோர் 26 ஆம் தேதி இந்தியா வருகின்றனர்.

அவர்களுடன் இந்தியாவின் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த சந்திப்பின்போது பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசப்பட உள்ளன. இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் திரு மைக்பாப்ரியோ இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |