இந்தியாவில் நவம்பர் முதல் மாதம் இந்திய தண்ணீர் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 2% இந்திய குடும்பங்கள் மட்டுமே தங்கள் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளில் இருந்து தரமான குடிநீர் பெறுகின்றனர். மேலும் 65% பேர் நவீன வடிகட்டுதல் செயல்முறை பயன்படுத்து கின்றனர். பஞ்சாயத்து மூலம் வழங்கப்படக்கூடிய நீர் மிகவும் மோசம் என்று 5% பேரும், மோசம் என்று 15% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 5% பேர் குடிநீர் இணைப்பு இல்லை.
அதனைத் தொடர்ந்து குடிப்பதற்கும் சமைப்பதற்கும் சுத்தமான குடிநீரை பெற 34% பேர் நீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பயன்படுத்துகின்றனர். 31% ஆர்.ஓ. அமைப்பை பயன்படுத்துகிறார்கள். 14% பேர் கொதிக்க வைத்து பயன்படுத்துகிறார்கள். 5% பேர் மண்பானைகளை பயன்படுத்துகிறார்கள். 1% பேர் குளோரினேசன், படிகாரம் மற்றும் பிற கனிமங்களை பயன்படுத்துகின்றனர்.மேலும் 7%குடும்பங்கள் சுத்திகரித்து பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வாங்குவதில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.