ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்று அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் இருந்தார். அவரிடம் எனக்கு ஹிந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் என்னை பார்த்து, “நீங்கள் இந்தியரா?” என்று கூறியபடி வினாவினார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது” என்று கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.