மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை வழியாக நடத்தப்பட்ட புதிர் போட்டியில் தமிழை தவிர்த்துவிட்டு ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் கேட்கப் பட்டதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வழியாக நடத்தப்பட்ட தமிழக மாணவர்களுக்கான புதிர் போட்டியில் தமிழை தவிர்த்துவிட்டு ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டுமே கேள்விகள் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பது ஏற்க முடியாதது என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பக்கம் இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக சொல்லிக் கொண்டு தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு எதிரான இத்தகைய நிலைப்பாட்டை அரசு கொண்டிருப்பது சரியானதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார் டிடிவி தினகரன். இனி வரும் காலங்களில் இது தொடரக் கூடாது என வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.