Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின முன்னெச்சரிக்கை : உஷார் நிலையில் ஒருலட்சம் போலீஸார் …!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,00,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாளை இந்தியா முழுவதும் 73-ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு  முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற்றுகின்றார்.அதே போல தமிழகத்தில்  தலைநகர் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கின்றார்.

Image result for உஷார் நிலையில் ஒரு லட்சம் போலீசார்

சமீபத்தில் காஷ்மீர் சிறப்பு சட்டத்தை இரத்து செய்து இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்பட்டதால் அதிருப்தியான பாகிஸ்தான் ஏதேனும் தீவிரவாத இயக்கத்தை வைத்து  அசம்பாவிதங்களை நிகழத்த கூடும் என்று நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போல தலைநகர் சென்னையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Categories

Tech |