Categories
தேசிய செய்திகள்

இந்தியா மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி – ராஜ்நாத் சிங்…!!

இந்தியா மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய பாதுகாப்பு படையினருக்கு அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்தியா இதயங்களைக் கொள்ளை கொள்வதிலேயே நம்பிக்கை கொண்டுள்ளதே தவிர, நிலப்பகுதிகளை அல்ல என தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங். சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்படுவதை இந்தியா பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

எதிரி நாடுகள் தாக்குதல் நடத்தினால் எப்போதும் போல தகுந்த பதிலடியை இந்தியா கொடுக்கும் என தெரிவித்த அவர், இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் தேசத்தின் பாதுகாப்பு, சுய பாதுகாப்பு அடிப்படையிலேயே எடுக்கப்படுபவையே  தவிர, நாடுகளை தாக்கும் நோக்கத்தோடு எடுக்கப்படுபவை அல்ல என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |