Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W : டெஸ்டில் சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா ….!!!

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி  மந்தனா சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான பகல் இரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள  கரரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது 44.1 ஓவரில் இந்திய அணி 132 ரன்கள் எடுத்திருந்தது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிக்கப்பட்டது .

அப்போது ஸ்மிருதி மந்தனா 80 ரன்னுடனும் , பூனம் ரவுத் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதைதொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாது ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் . இவர் 170 பந்துகளில் 100 ரன்கள்குவித்துள்ளார் .

Categories

Tech |