Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND-W VS AUS-W : 9 விக்கெட் வித்தியாசத்தில் …..ஆஸ்திரேலியா அபார வெற்றி ….!!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான  முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது .

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் , 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 63 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் டார்சி பிரெளன்   4 விக்கெட்டுகள் கைப்பற்றினார் .இதன்பிறகு 226 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

இதில்  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 41 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் குவித்து எளிதில் வெற்றியை கைப்பற்றியது. இதில் தொடக்க வீராங்கனை ரேச்சல் ஹைனஸ் 93 ரன்னும்,கேப்டன் மேக் லேனிங் 53 ரன்னுடனும்   இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 25 வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 12 முதல் விளையாடி அனைத்து ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்த அணியாக விளங்குகிறது .

Categories

Tech |