இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
மேலும் அவருக்கு மாற்று வீரராக பிசிசிஐ வீரரையும் அறிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேஎல் ராகுல், அக்ஸர் படேல் ஆகியோர் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகியுள்ளனர். இதனால் அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா ஆகியோர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.