இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – தவான் ஜோடி களமிறங்கினர்.ஆனால் இந்திய அணிக்கு தொடக்கமே சொதப்பலாகவே அமைந்தது. இதில் ரோகித் சர்மா (13) ரன் , தவான் (10) ரன் , விராட் கோலி (0) ரன் என அடுத்தடுத்து அட்டமிழந்து வெளியேறினர். இதனால் 42 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறியது.
இதன் பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர்-ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.இதில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.இதில் இந்திய அணி 187 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்திருந்தது.இதன் பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் -தீபக் சாஹர் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .இதில் தீபக் சாஹர் 38 ரன்னும் ,வாஷிங்டன் சுந்தர் 33 ரன்னும் குவித்தனர்.இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் குவித்துள்ளது.