Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : வெற்றி கணக்கை தொடங்குமா இந்தியா ….? முதல் டி20 போட்டி நாளை தொடக்கம் ….!!!

இந்திய அணி சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை  கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.இதைதொடர்ந்து இந்திய அணி அடுத்து இலங்கை அணியுடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை நடைபெற உள்ளது .ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரையும் வெற்றியுடன் தொடங்குமா? என்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அதேபோல்  இலங்கை அணிக்கெதிரான  தொடரிலும் விளையாடுவார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் இடம்பெறாத பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.அதேபோல் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதனிடையே காயம் காரணமாக தீபக் சாஹர் விலகிய நிலையில்,விராட் கோலி,  ரி‌ஷப்பண்ட் ஆகியோருக்கு டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இரு அணிகளும் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன .இதில் இந்தியா 14 போட்டியிலும், இலங்கை 7- போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவில்லை. மேலும் இரு அணிகளுக்கு இடையே கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற டி20  தொடரில் 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றி இருந்தது.இப்போட்டி நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்  நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Categories

Tech |