Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : தொடரை கைப்பற்றுமா இந்தியா ….? 2-வது டி20 போட்டி …. இன்று நடக்கிறது ….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று தொடங்குகிறது. 

இலங்கையில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது. இதில்  இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் இருவரும் இங்கிலாந்திற்கு புறப்பட இருக்கின்றனர்.

இதனால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இருவரும் விளையாடி விட்டு இறுதி ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஒருநாள் தொடரை தவறவிட்ட இலங்கை அணி டி20 தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது .இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை  சோனி சிக்ஸ் மற்றும் சோனி டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது .

இரு அணிகளின் உத்தேச பட்டியல்:

இந்திய அணி : ஷிகர்  தவான் (கேப்டன்), பிரித்வி ஷா,, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி.
இலங்கை அணி :அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, அசலங்கா அல்லது சமரவிக்ரமா, அஷென் பண்டாரா, ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, உதனா, சமீரா, அகிலா தனஞ்ஜெயா.

Categories

Tech |