இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 262 ரன்களை குவித்துள்ளது .
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கபட்ட 2- ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ – மினோத் பானுகா ஜோடி சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். இதில் அவிஷ்கா 32 ரன்களும், மினோத் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் தசுன் ஷானகா – அசலங்கா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அசலங்கா 38 ரன்களும்,ஷானகா 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய கருணரத்னே 1 பவுண்டரி, 2 சிக்சர்களை அடித்து விளாசி 43 ரன்களை குவித்து இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை குவித்தது. இதில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ், தீபக் சஹர் மற்றும் யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் 263 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கி உள்ளது .