இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இந்தப்போட்டியில் அறிமுக வீரர்களாக தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், நிதீஷ் ராணா மற்றும் சேதன் சக்காரியா ஆகியோர் களமிறங்கினர் . இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் – ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி களமிறங்கினர்.இதில் ருதுராஜ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதன் பிறகு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 29 ரன்களும் ,கேப்டன் தவான் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர் .இதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர் .
இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை குவித்தது. இதன்பிறகு 133 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இலங்கை அணி விளையாடியது. இதில் களமிறங்கிய அவிக்சா ,சமராவிக்ரமா, சனகா, மெண்டீஸ், மினோட் பனகா ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 17.2 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களை குவித்தது. இந்த நிலையில் களமிறங்கிய தனஜெயா-கருரத்னே ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்கள். ஒரு கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில் சேதன் சக்காரியா அந்த ஓவரில் பந்துவீசினார். கடைசியில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை உள்ளது.