Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை ….? 3-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது….!!!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது  ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது  ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன் நடந்த போட்டிகளில்  கேப்டன் ஷிகர் தவான், பிரித்வி ஷா இஷான் கிஷன் ஆகியோரின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதேபோல் 2- வது  ஒருநாள் போட்டியில் இந்திய அணியை  தோல்வியில்  இருந்து காப்பாற்றிய தீபக் சாகர் 69 ரன்களை குவித்து ஹீரோவாக ஜொலித்தார்.

இதேபோல் சூரியகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார். மேலும் பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் விக்கெட்டும் முக்கிய பங்காக இருந்தது .இந்நிலையில் இன்று நடைபெற உள்ள 3-வது  ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதனால் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தேவ்தத் படிக்கல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. அதேசமயம் இத்தொடரில் ஆறுதல் வெற்றி பெரும் முனைப்புடன் இலங்கை அணி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ள  இந்த போட்டி சோனி சிக்ஸ் மற்றும் சோனி டென்  சேனல்கள்  நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல்:
இந்தியா அணி :

ஷிகர் தவான் (கேப்டன்),பிரித்வி ஷா (அ) தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் (அ) சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் (அ) வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி :

அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலன்கா, ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, அகிலா தனஞ்ஜெயா, லஹிரு குமரா.

Categories

Tech |