Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL: 3 rd டி20 போட்டி…. டாஸ் வென்ற “இலங்கை அணி”…. “நாங்க விரும்பியது கிடைச்சிருக்கு”…. ரோஹித் மாஸ் பேட்டி….!!

இந்தியாவுக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ்ஸை வென்றுள்ளது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி லக்னோவில் நடைபெற்றுள்ளது. இதில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 2 ஆவது போட்டி தர்மசாலாவில் வைத்து நடைபெற்றுள்ளது. அதிலும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 3 ஆவது போட்டி நேற்று நடைபெற்றுள்ள நிலையில் டாஸ்ஸை இலங்கை அணி வென்றுள்ளது.

இதனையடுத்து இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன் பின்பு பேசிய ரோகித் சர்மா நாங்கள் விரும்பியது போலவே பந்துவீச்சு முதலில் தங்களுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இஷான், பும்ரா, புவி, சஹல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல முக்கிய வீரர்கள் அணிக்குள் வந்துள்ளதாகவும், இந்த 125 ஆவது டி20 போட்டியில் விளையாடுவது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |