இலங்கைக்கு எதிரான டி20 இந்திய அணியில் ருதுராஜ்ஜின் பெயர் இடம் பிடிக்கப்படாதது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 போட்டி லக்னோவில் நேற்று துவங்கியுள்ளது. இதில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த பிறகு ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நாங்கள் சேஸ் செய்ய தான் விரும்புகிறோம், பிட்ச் எப்படி ஒத்துழைக்கும் என்பது குறித்து எங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் ருதுராஜின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் ரோகித் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்க தென் ஆப்பிரிக்கா தொடர், மேற்கு இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இடம் பிடித்து வரும் ருதுராஜ் XI இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்படுவது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதுமட்டுமின்றி ருதுராஜ்க்கு பதிலாக ரோஹித் சர்மா இஷானை ஓப்பனராக களமிறக்க முனைப்பு காட்டி வருகிறார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக ரோகித் சர்மா வலதுகை இடதுகை பார்ட்னர்ஷிப்பை அதிகம் விரும்புவதால் கிஷனுக்கு போட்டிகளில் அதிக வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.